திங்கள், 20 செப்டம்பர், 2010

கல்யாணச் சடங்குகள்



கல்யாணச் சடங்குகள் தற்காலத்தின் வசதிக்கு ஏற்ப வெகுவாக குறைக்கப்பட்டுவிட்டாலும், சுருங்கப்பட்ட திருமணங்களிலும் கூட சில சம்பிரதாயங்கள் மாறாது கடைபிடித்து வருகிறோம். அவற்றில் ஒன்று மாலை மாற்றுதல். மணமான இருவர் மாலை மாற்றிக்கொள்வதன் அர்த்தம், அவர்கள் இனி இருவரல்ல, ஒருவரே என்று ஊரறிய சொல்லாமற் சொல்வது. என்னுடைய எல்லாம் இவளுக்கும் இவளுடையது எல்லாம் எனக்கும் சொந்தம்
என்று உரைப்பதே மாலை மாற்றும் பழக்கத்தின் உள்ளர்த்தம். மேலும் 'என் மனநிலை இதுதான்' என மணமகன் மாலை சாற்றுகிறான். 'அதை நான் அப்படியே ஏற்கிறேன்' என்று மணமகள் மாலையை வாங்கிக் கொள்கிறாள் என்பது இன்னொரு அர்த்தமாம்.


சில வீட்டுத் திருமணங்களில் தாலி கட்டுதற்கு முன்பு, தலையில் நுகத்தடி நிறுத்துவது பழக்கம். மாடுகள் இரண்டும் சேர்ந்து வண்டியை சுமந்து கரைசேர்வது போல், புருஷனும் அவன் ஸ்த்ரீயுமாக இல்லறத்தை குடைசாயாது சமமாக நடத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம். இதுவும் பிற்காலத்தில் நடைமுறைக்கு ஒத்தவாறு சொல்லப்பட்ட கருத்து. நுகத்தடி வைப்பதற்கு வேறு அர்த்தமும் உண்டாம். அத்திரி மஹரிஷியின் மகள் அபலா, தோல்வியாதியால் அவதிப்படுகிறாள். அதனால் அவளுக்கு திருமணம் நடந்தேறவில்லை. அவள் இந்திரனை நோக்கி பிரார்த்திக்கிறாள். அவனும் அவள் பிரார்த்தனைக்கு இரங்கி, அவளுக்கு நுகத்தடியை வைத்து, மந்திரம் ஓதி, நீர் விடுகின்றான். உடனே அவள் வியாதி நீங்கி பூர்ண குண்மடைந்து இந்திரனையும் மணக்கிறாள். மணமகளாகப்பட்டவளும் நோய் நொடிகளுக்கு பலியாகாது சிரஞ்சீவியாக இருக்கக்கடவது என்று மந்திரம் சொல்லி நுகத்தடியின் மேல் நீர் விடுவது வழக்கமாகியது.

சமீபத்தில் திருமணம் செய்து வைக்கும் சாஸ்திரிகள் பலர் திருமண சடங்கில் சப்தபதியின் முக்கியத்துவத்தை உரைக்கின்றனர். திருமணம் தாலிகட்டுவதுடன் முடிந்துவிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தாலிகட்டிவிட்டதால் இருவர் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்ளப்படுவதில்லை. சப்தபதி என்ற சடங்கே திருமணத்தை பூர்த்தி செய்கிறது. 'தாலி' என்ற வழக்கமே பிற்பாடு தோன்றப்பட்டது என்று பலர் கூறுகின்றனர். 'பொன்' சேமித்தல் தம்பதியரின் அவசர-அவசிய காலகட்டங்களில் சேமிப்பாக இருக்க உதவும் என்பதால் தாலி வழக்கம் பின்னாளில் ஏற்படுத்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனாலும், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திலும் சௌந்தர்யலஹரியிலும் அம்பாள் திருமாங்கல்யம் அணிந்திருபதாய் பாஷணைகள் இருக்கின்றன. சௌந்தர்ய லஹரியில் , அம்பாள் கழுத்தில் மாங்கல்யமாக மூன்று நூல்கள் மூன்று ரேகைகளாக இருக்கின்றன என்று ஆபஸ்தம்ப சூத்திரத்தில் இருக்கின்றதாம். அதனால் 'தாலி' பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் தெளிவாகக் கூறுவது கடினம். அடுத்து சப்தபதியைப் பார்ப்போம்.


சப்தபதி என்றால் 'ஏழு அடிகள்' என்று பொருள். ஒரு ஆடவனும் பெண்ணும் சப்தபதி எடுத்துவைத்தால் அவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். ஏழு அடிகளை ஒன்றாக எடுத்து வைப்பதன் மூலம் அவர்களின் தோழமை உறவு கொண்டாடப்படுகின்றது. யமனுடன் ஏழு அடிகள் சாவித்திரி எடுத்து வைத்ததனால், அவளை விலகச் சொல்லும் யமனிடம், சப்தபதி உன்னுடன் நடந்ததனால் "நீ என் நண்பன், நட்பின் பெயரிலாவது என் மணாளனை மீட்டுக் கொடு' என்று சாவித்திரி கேட்கிறாள்.


ஏழடிகள் நீ என்னுடன் நடந்ததனால் இன்று முதல் நீ என் தோழி,
நான் வானம் என்றால் நீ பூமி
நான் மனம் என்றால் நீ வாக்கு
எல்லோருடனும் அன்பு பூண்டு இல்லறத்தை இனிதாக்குவாயாக"


என்று அவன் கூறி அவளை தோழியாக ஏற்பதன் மூலம் மனையாளாகவும் ஏற்கிறான் என்பதே சப்தபதியின் உட்கருத்து.

உணவு நிறைவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
உடல் வலிமை பெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
சுகத்தை அளிப்பதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்
பசுக்களையும் செல்வத்தையும் அளிப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
நாட்டில் நல்ல பருவங்கள் தவறாது இருப்பதற்கு விஷ்ணு நம்மோடு வரட்டும்
யாகங்களை செய்து வைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்காக விஷ்ணு நம்மோடு வரட்டும்


என்பது ஒவ்வொரு அடியிலும் சொல்லும் மந்திரங்களின் பொருள்அதற்கு பின் வரும் சம்பிரதாயங்கள் "அம்மி மிதிப்பதும் அருந்ததி பார்ப்பதும்". நேர காலங்கள் சரியாக அமையாது துன்பம் நேரும் போதும் அம்மியைப் போல் கலங்காது அவள் உடன் வரவேண்டும் என்பது அம்மி மிதப்பதன் அர்த்தம். அருந்ததி என்பவள் நட்சத்திரம். துருவனைப் போல் என்று அழியாது சிரஞ்ஜீவியாக திகழ்பவள். பதிவ்ரதா தர்மத்தை வழுவாது கடைபிடித்தவள். பத்தினிகளில் எல்லாம் உயர்ந்தவள். வசிஷ்டரின் மனைவி. சப்தரிஷிகளின் பத்தினிகளில் இவள் உயர்ந்தவளாக கொள்ளப்பட்டிருக்கிறாள். "வசிஷ்டரின் மனைவி அருந்ததி எப்படி பதிவ்ரதையோ அப்படியே நானும் ராமனை விட்டு பிரியாமல் இருபேன்" என்று சீதை கூறினாள். அருந்ததியை தரிசனம் செய்து 'இவளைப் போல் நீயும் இருப்பாயாக' என்று மணமகளுக்கு சொல்வது போன்ற நியாயம்.

"திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்தவேண்டுமா?

*திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்தவேண்டுமா?*
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம்
செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை
அளிக்கின்றனர்.அதை மணமகள் உடுத்திக்கொள்ள உதவும் உரிமை மணமகனின்
சகோதரிக்கு தரப்படுகிறது.ஏனெனில் தன் சகோதரன்(மணமகன்)இல்லற சுகங்களைத்

துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான் என்பதை அவ்வேளையில் உறுதி
செய்துகொள்ளவேண்டிய பொறுப்பை அவளுக்கு சாஸ்திரம் வழங்குகிறது.
இந்த முஹூர்த்தப்புடவை கூறைப்புடவை என்றும் அழைக்கப்படும்.அப்படிப்பட்ட
இந்த முகூர்த்தப்புடவையை திருமணம் முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின்
பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று
*ஆபஸ்தம்ப முனிவர் சொல்லியுள்ளார்* ஆனால் இது தமிழகத்தில்
கடைபிடிக்கப்படுவதில்லை.

*பட்டுப்புடவை தேவையா?*
இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார் தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த
முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த பட்டுப் புடவையை வாங்குவதால் அதை
பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல் போகிறது.சரி இந்த பட்டுப் புடவை
தேவையா?என்று நோக்கும்போது பட்டுத் துணிகள் உயிர்வதையால்
உண்டாகிறது.மேலும் ரசாயன நூல்களாலான துணிகள் இயற்கைக்கு ஏற்றதல்ல.மேலும்
புதிதாய இல்லறத்தில் இணையும் தம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல
ஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே.இயற்கையான பருத்தி
நூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.இப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை
மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,அதை முகூர்த்தப் புடவையாக
பயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது.
*புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்?*
திருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,அவளது சிறப்பை கண்ணுற்றவாறு
அமர்ந்திருப்பர்.அதனால் அவள் மீது
கண்ணேறு(திருஷ்டி)படிந்திருக்கும்.பின்னர் கணவன்,தன் மனைவி அந்த
முகூர்த்தப்புடவையை மீண்டும் உடுத்தி இருக்கும்போது பார்த்தால்,அது
அவனுக்கு குரூரமாக(கண்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக)தெரிய
வாய்ப்புண்டு.அந்த குரூர புடவையை, திருமண நாளுக்குப் பிறகு, கட்டப்படாமல்
இருப்பதே நல்லது.ஏனெனில் அப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண
அலையின் காரணமாக கணவன்,மனைவிக்குள் சண்டை,சச்சரவுகள் வராமல் தடுக்க
அப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.எனவே தான் அது தானமாக
வழங்கப்படுகிறது.மேலும் குரூர புடவை என்பதே திரிந்து கூறைப்புடவை
ஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.எனவே அனைவரும் திருமணத்தில்
முகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே பயன்படுத்தி,அதை
திருமணத்திற்குப்பின் தானமும் செய்து, தம்பதிகளின் வாழ்வில் மேன்மையை
அடையச்செய்வோம்.

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம்
இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை
பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக
உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு
சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன்
சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

நமது பாரத தேசத்தில் ஆலய மூல விக்ரஹம் கருங்கல்லாலேயே
வடிவமைக்கப்படுகிறது.கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால்
ஈர்த்து,தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.எனவே தான்
மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி
ஸ்தபதியார்களால் வடிவமைக்கப்படுகின்றன.
"ஓம்"என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி,பலவகை அபிஷேகங்களை
செய்யும்போது,மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன.அம்மின்னூட்டக்
கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும்,மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து
வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும்.

நாள்தோறும் 4,6
காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள்
தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு
உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன.இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும்
என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்ல
வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.பெண்களுக்கு அவர்களின்
உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்.இஃது எல்லா கோயில்களுக்கும்
பொருந்தும்.

எல்லா
கோயில்களிலும் இம்முறை இன்றும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.இது
நமக்கு நன்மை தருவதற்கே.கோயிலுக்குள் செல்லும்போது மேற் சட்டையை
கழற்றாவிட்டாலும்,குறைந்தபட்சம் உள் மண்டபத்தில் சென்று சுவாமியைத்
தரிசிக்கும்போதாவது கழற்றி விடுவது நமக்கு நலம் பயப்பதாகும்.
வழிதெரிந்து வழிபடுவோம்!வாழ்வில் பல நலன்களை அடைவோம்