திங்கள், 20 செப்டம்பர், 2010

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம்
இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை
பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக
உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு
சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன்
சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

நமது பாரத தேசத்தில் ஆலய மூல விக்ரஹம் கருங்கல்லாலேயே
வடிவமைக்கப்படுகிறது.கருங்கல்லுக்கு ஒலி,ஒளி அலைகளை எளிதில் தன்பால்
ஈர்த்து,தேக்கிவைத்து வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.எனவே தான்
மூலமூர்த்தங்கள் கருங்கற்களில் ஆகம,சிற்ப சாஸ்திர முறைப்படி
ஸ்தபதியார்களால் வடிவமைக்கப்படுகின்றன.
"ஓம்"என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி,பலவகை அபிஷேகங்களை
செய்யும்போது,மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன.அம்மின்னூட்டக்
கதிர்கள் நம்மீது படும்போது உடம்புக்கு ஆரோக்யத்தையும்,மனதுக்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளனர்.
அபிஷேகங்களால் வெளிப்படும் மின்னூட்டக் கதிர்களைத் தேக்கி வைத்து
வெளிப்படுத்தும்போது அவை நம் உடம்பின்மீது படவேண்டும்.

நாள்தோறும் 4,6
காலங்கள் எனத் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்படுவதால் அந்த அருட்கதிர்கள்
தொடர்ந்து வெளிப்பட்டுத் தரிசிக்கச் செல்கின்ற நம் உடம்பில் பட்டு
உடம்புக்கு நலத்தையும் மனதுக்கு அமைதியையும் தொடர்ந்து
தருகின்றன.இதற்காகவே அபிஷேகங்கள் பலவாக நாள்தோறும் செய்யப்படுகின்றன.

இவ் அருட்கதிர்கள்-மின்னூட்டக்கதிர்கள் நம் உடம்பின் மீது படவேண்டும்
என்பதற்காகவே கோயிலுக்குள் செல்லும்போது ஆண்கள் மேற் சட்டையின்றி செல்ல
வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர்.பெண்களுக்கு அவர்களின்
உடலமைப்பு கருதி இதிலிருந்து விலக்களித்தனர்.இஃது எல்லா கோயில்களுக்கும்
பொருந்தும்.

எல்லா
கோயில்களிலும் இம்முறை இன்றும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது.இது
நமக்கு நன்மை தருவதற்கே.கோயிலுக்குள் செல்லும்போது மேற் சட்டையை
கழற்றாவிட்டாலும்,குறைந்தபட்சம் உள் மண்டபத்தில் சென்று சுவாமியைத்
தரிசிக்கும்போதாவது கழற்றி விடுவது நமக்கு நலம் பயப்பதாகும்.
வழிதெரிந்து வழிபடுவோம்!வாழ்வில் பல நலன்களை அடைவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக