திங்கள், 27 ஜூன், 2011

‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிக‌ள்

ம‌னித‌ர்க‌ள் ம‌னித‌ர்களாக வா‌ழ பல ‌சிற‌ந்த பொ‌ன்மொ‌ழிகளை மகா‌ன்களு‌ம், அ‌றி‌ந்தவ‌ர்களு‌‌ம் கூ‌றியு‌‌ள்ளன‌ர். அவ‌ற்றை படி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌‌ந்து கா‌ட்டுவோ‌ம். தா‌யி‌ற் ‌சிற‌ந்த கோ‌விலு‌ம் இ‌ல்லை, த‌ந்தை சொ‌ல் ‌மி‌க்க ம‌ந்‌திர‌ம் இ‌ல்லை. உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை இய‌ற்கை த‌ன் வ‌ழி‌யிலேயே செ‌ல்லு‌ம், அட‌க்குத‌ல் எ‌ன்ன செ‌ய்யு‌ம். ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌ன் முடிவு சாகாத க‌ல்‌வியை‌த் த‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை. தூ‌க்க‌த்தை ஒ‌ழி‌த்தா‌ல் ஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம். அவசரமாக தவறு செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மே‌ல் உ‌ண்மையான ந‌ட்பு ஆரோ‌க்‌கிய‌ம் போ‌ன்றது. அதை இழ‌‌க்கு‌ம் வரை அத‌ன் ம‌தி‌ப்பு தெ‌ரிவ‌தி‌ல்லை. ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன் ந‌‌ற்செய‌ல்களை‌ப் பா‌ர்‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களை செ‌ய்ய இயலாது. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம். ‌ மி‌ன்‌மி‌னி‌ப் பூ‌ச்‌சி எ‌வ்வளவு ஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌ம் அது ‌தீ ஆகாது. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன். அரச‌ன் அ‌ன்று கொ‌ல்லு‌ம், தெ‌ய்வ‌ம் ‌நி‌ன்று கொ‌ல்லு‌ம். எ‌ளியாரை வ‌லியா‌ர் அடி‌த்தா‌ல், வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம். ஊ‌சி முனை‌யி‌ல் தவ‌ம் செ‌ய்தாலு‌ம் உ‌ன்னதுதா‌ன் ‌கி‌ட்டு‌ம். ‌வியா‌தி‌க்கு மரு‌‌ந்து உ‌ண்டு, ‌வி‌தி‌க்கு மரு‌ந்த உ‌ண்டா ‌தினை ‌வி‌தை‌த்தவ‌ன் ‌தினை அறு‌ப்பா‌ன், ‌வினை ‌விதை‌த்தவ‌ன் ‌வினை அறு‌ப்பா‌ன்

பொன்மொழிகள்

எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.
வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.
செயலில் அல்ல ?
வாழ்க்கையின் எந்தத் துறையிலும்
ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும்
வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன.
(ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)



எண்ணங்களில் கவனமாக இருங்கள் -
அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -
அது செயலாக வெளிப்படுபவை.
செயல்களில் கவனமாக இருங்கள் -
அது பழக்கமாக மாறுபவை.
பழக்கங்களில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் ஒழுக்கமாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -
அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.



சொல்லுக்கும்,செயலுக்கும் -
நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்.



பிறரது உதாசீனம் பிறரது அவமானச்சொல் -
சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்.


அன்பான பதில் -கோபத்தை விரட்டி அடிக்கிறது.
துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன.
(சாலமன்)


சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே
சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி.
(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 ? 400 கி.மு)



பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை
"மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.


மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டு அழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில் உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்.
ஓ.மில்லர்.



கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவே ஆறாது.
(ப்ராங்க்லின்)


மரணமும், வார்த்தைகளும், வரிகளும்,
தவீர்க்க முடியாதவை.
(ஹாலிபர்ட்டன்)


பொய்யான சொற்கள் தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது.
(சாக்ரடீஸ்)



சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.
அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது.
(மகாத்மா காந்தி)



வார்த்தைகளில் மென்மையும்,
வாதத்தில் அழுத்தமும் தேவை.


பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.
சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத்திரும்ப சொல்லப்படும் போது வலிமை தருகிறது. சோர்வு என்ற சொல் சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனித சக்தியை வடித்துவிடுபவை.



மெழுகுவர்த்தி சிந்தனைகள் -தீப்பந்த வார்த்தைகள்.



மனிதனுடைய இதயக் குமறலே,
அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.



சொன்ன ஒரு சொல்,
விடுபட்ட அம்பு,
கடந்து போன வாழ்க்கை,
நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -
ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது.
(அராபிய நாட்டுப் பழமொழி)



கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,
காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,
ஓசைகளும் நம்மையறியாமலேயே
நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன.
பதிந்து நமக்குத் தெரியாமலேயே
நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன.
( மனோதத்துவம்)



பிறருடைய வார்த்ததைகள் -
உங்களது உற்சாகத்தை,
உங்களுடைய முயற்சியை
ஒருநாளும் குறைத்து விட முடியாது.
நீங்கள் அனுமதித்தாலொழிய.



சொற்களை எண்ணிக்கை போடக்கூடாது.
எடைதான் போட வேண்டும்.



சொற்கள் -
தேனீக்களைப் போன்றது.
அவைகளில் தேனும் உண்டு.
கொடுக்கும் உண்டு.



மென்மையான ஒரு சொல் இதயவாசலைத் திறக்கிறது.


உணர்வதை நாம் செய்வோம்.
சொல்வதை நாம் உணர்வோம்.
(செனிகா)


காலம் போகும்.
வார்த்தை நிற்கும்.



அறிவுள்ள மனிதனுக்கு ஒரு சொல் போதும்.



அம்புகள் உடலை ஊடுருவித்தாக்கித் துளைக்கின்றன.
கொடுஞ்சொற்கள் ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.



சுவாசிக்கும் எண்ணங்களே ?
எரியும் வார்த்தைகள்.
( கிரே )



குறைந்த வார்த்தைகள் -
மேலான பிராத்தனையாகும்.
(லூதர்)



திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -
சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்.
( பாயிலே)


தீயைவிடக் கொடுமையானது ? தீய சொல்.



தைரியமான சொற்கள் -
மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -
மனிதனை வீரனாக்கும்.



வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்
அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.
அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.
அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது.
( லென்னி புரூஸ்)



வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை ?
உயிரும், நேரமும், சொற்களும்.


சொல்வன்மைக்கு மனத் தெளிவு அவசியம்.
எந்த விஷயத்தின் நுட்பத்தையும்,
முழுத்திறமையையும் அலசி அறிந்து
பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையை
விளக்கும் ஆற்றல் வேண்டும்.

கடைக்குட்டி

திருவாரூரில் கிருபானந்தவாரியார்
பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. "
சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே
கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு
பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை Smile அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன்
ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது
என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து "
இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.
10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள்
என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "
உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே
கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ Smile) வீட்டுக்கு போய் உதை
வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு
சென்றனர்.