பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது. "
சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே
கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். கரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு
பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை

ஞானியாகி விடுவான் . என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது
என்ற ஞானம்."
இவ்வாறு விளக்கிய வாரியார்.. கூட்டத்தினரை பார்த்து "
இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.
10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள்
என்றார்கள்.
வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "
உட்காருங்கப்பா! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு விவஸ்தையே
கிடையாதா? அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ

வாங்காதீங்கப்பா" என்றார். எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள்.
குழந்தைகளும் தாங்கள் எத்தனையாவது என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் வீடு
சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக