வெள்ளி, 17 ஜனவரி, 2014

இரு மனம் கூடும் திருமணம் கூடிவர உங்களுக்கு சோதிடத்தில் இருந்து சில ஆலோசனைகள் ...


இன்னும் திருமணத்தில் தாமதமா ?

சிலருக்கு திருமணம் இலகுவாக நடைபெறுகின்றது. இல்லற வாழ்க்கையும் நன்றாக அமைகின்றது. திருமணத்தின் பின் சிறிது சிறிதாக வாழ்வில் முன்னேற்றம் அடைகின்றனர். வாழ்வின் பாக்கியமான குழந்தைச் செல்வங்களையும் அடைகின்றனர். ஆனாலும் இன்னும் சிலருக்கோ திருமணத்தில் தடை தாமதங்கள் ஏற்டுகின்றது. திருமண வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து செல்கின்றது. அவர்களுக்கோ அழகிலும் குறைவில்லை. சொத்து, வேலைவாய்ப்பு என்பவற்றிலும் குறை இல்லை. ஆனாலும் திருமண பாக்கியம் மட்டும் இன்னும் கூடிவரவில்லை. அவர்களை விடவும் அழகில் குறைந்த அல்லது வசதி குறைந்தவர்களுக்கு கூட விரைவில் திருமணம் நடைபெறுகின்றது. சிலருக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது? அதற்கான காரணத்தை முதலில் ஆராய்வோம்.

7-ம் வீட்டில் சனி, ராகு, செவ்வாய் போன்ற பாப கிரககங்கள் இருப்பது விரும்பத்தக்கது அல்ல. ஒருவருடைய ஜாதகத்தில் சனியும், சநதிரனும் சேர்ந்து இருந்தால் அதற்கு “புனர்ப்பு” என்று பெயர். இது ஒரு தோஷம் ஆகும். இது திருமணத்தில் தாமதத்தை ஏற்படுத்துகின்றது. திருமணம் நிச்சயம் ஆனாலும் பலதடங்கல்களைக் கொடுக்கும்.

திருமணம் நடைபெறவுள்ள நல்ல காலத்தில் சனிஸ்வர மகா தசை இருப்பதும் ஓரளவு திருமணத்தில் தாமதம் ஏற்பட வழிவகுக்கின்றது. அத்தோடு சனிப் புத்தி நடைபெற இருப்பின் அதற்கு முன் திருமணம் செய்யாவிட்டால் திருமணம் இன்னும் 7 1/2 ஆண்டுகள் தாமதமடையும்.

ஒருவருடைய திருமண வாய்ப்புக்கு அவருடைய ஜாதகம் தடை ஏற்படுத்தும் விதம்:-

முதலில் உங்கள் ஜாதகத்திலும் இவ்வாறான குறை ஏதும் உள்ளதாவென ஆராய்ந்து பார்கவேண்டும். உண்டெனில் அவை நாம் முற்பிறவியில் இருந்து கொண்டு வந்த துர்ப்பலன்கள் ஆகும். ஆனாலும் நீங்கள் சற்றேனும் பயப்படவேண்டியதில்லை. ஏனென்றால் இவ்வாறான தோஷங்களுக்கு சோதிடத்தில் இலகுவான பரிகாரங்கள் உண்டு. ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்யாமல் சாதாரண சோதிட முறைகள் மூலம் தோஷங்களை நிவர்த்தி செய்து திருமண பாக்கியத்தை பெறமுடியும்.

"நாங்கள் ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் செய்தோம். 80% ஜாதகம் பொருந்தி வந்திருந்தால் இப்படி நடந்திருக்காது". இந்த இடத்தில் நடைபெற்ற மிகப் பெரிய குழப்பம் இதுதான்:

திருமண பொருத்தம் பார்ப்பதும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும் ஒன்றல்ல இரண்டு விடயங்கள் ஆகும்.
இந்த தம்பதியர் பொருத்தம் பார்த்திருப்பது ஜாதகப் பொருத்தமே அல்ல மாறாக திருமண பொருத்தமே ஆகும். இவர்கள் முதலில் பார்த்திருக்க வேண்டியது உண்மையில் ஜாதகப் பொருத்தமே ஆகும். ஜாதகப் பொருத்தம் இல்லை என்றால் 80% அல்ல 100% திருமண பொருத்தங்கள் பத்தும் பொருந்திவந்தாலும் பயனில்லை. எப்படி இந்த ஜாதக பொருத்தத்தை பார்ப்பது? இருவரதும் ஜனன குறிப்புகளையும் ஆராய்ந்து விவாக தோஷங்கள் ஏதும் உண்டாவெனப் பார்க்கவேண்டும்.இந்த பொருத்தங்கள் பொருந்திவந்தால் மட்டுமே விவாக பொருத்தம் பார்க்கவேண்டும். அது வேறு ஒரு நடைமுறையாகும்.

மங்கலமான திருமண வாய்ப்பை எதிர்பார்க்கும் நீங்கள் பின்வருவனவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

01. திருமண தாமதங்கள் உண்டெனில்....
முதலில் ஜனன குறிப்பை ஆராய்ந்து தாமதத்திற்கான காரணத்தை சரியாக கண்டறிய வேண்டும்.

02. திருமணத்திற்காக....
1. முதலில் இருவரதும் ஜாதக பொருத்தங்களையும் பார்த்து தோஷங்கள் இருப்பின் அவற்றைக் கண்டறியுங்கள்.
2. இரண்டாவதாக 10 திருமண பொருத்தங்களையும் பார்த்து பொருத்தத்தை உறுதி செய்யுங்கள்.
3. பஞ்சாங்கத்தில் காணப்படும் சுப நாளொன்றில், சுப காலத்தில் பலம் வாய்ந்த சுப முகூர்த்தத்தை தெரிவு செய்து திருமணம் செய்துகொள்ளுங்கள்.
4. திருமணத்தின் மூலம் உங்கள் இல்லற வாழ்க்கையை சாத்தியமாக்கி அதிஷ்டத்தை பெற்றுக்கொள்ள உங்கள் ஜன்ம குறிப்பின்படி உங்கள் இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து வணங்கி ஆசிபெறுங்கள்.

குறைந்த அறிவுடன் ஜாதகங்களை பரிசோதிக்கும் சோதிட நிபுணர்களால் இன்று பலருடைய இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது . இருவரதும் ஜாதகங்களிலும் உள்ள பொருத்தங்கள் மற்றும் பொருத்தமின்மை ஆகியவற்றை முன்கூட்டியே சோதிடர்கள் அறியத்தந்திருந்தால் பல திருமணங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம். இதனால் பல திருமண ஒப்பந்த முறிவுகள், விவாகரத்துகள் ஆகியவற்றை குறைத்திருக்க முடியும். ஆனாலும் நீங்கள் அந்தளவுக்கு துரதிஷ்டசாலி இல்லை. ஏன் என்றால் இதன் பிறகாவது சிறிது தெளிவோடு இதைப்பற்றி ஆராய்ந்து பார்க்க சந்தர்பம் இருப்பதால் ஆகும். இந்த தெளிவுபடுத்தல் இத்தோடு நின்றுவிடாமல் உங்கள் திருமணத்திற்கும் இன்னும் சரியான சோதிட சேவையை வழங்க நாம் தயாராக உள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக